மக்கள் குரல் என்ற பெயரில் ஐக்கிய தேசியக் கட்சி தமிழ் பத்திரிகை ஒன்றை வெளியிடவுள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதலில் வாராந்தம் வெளிவரவுள்ள இப்பத்திரிகை சில தினங்களின் பின்னர் தினப் பத்திரிகையாக வெளிவரவுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மத்திய வங்கி ஆளுனராக இருந்த அர்ஜூன மகேந்திரனின் குடும்பத்தினரே பத்திரிகையின் நேரடி உரிமையாளர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அலோசியஸ் மகேந்திரனை உரிமையாளராகவும், நிர்வாக இயக்குனராகவும் கொண்டிருக்கும். ஆரம்பத்தில் வாரந்தம் வெளியாகும். விரைவில் நாளாந்தம் வெளியாகும். வாரப்பத்திரிகையின் விலை 50 ரூபாவாக விற்கலாமென திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக வடகிழக்கில் பணியாற்றும் ஊடகவியலாளர்களை பணிக்கமர்த்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் எனவும் தெரியவருகின்றது. தமிழ் ஊடக நிறுவனங்களில் வழங்கப்படும் ஊதியத்தை விட இதில் அதிகளவு ஊதியம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.