இன்றைய நாளில் தேச உணர்வோடு தானைத் தலைவன் வளிநின்ற ஒரு போராளியின் உணர்வுகளை சுமந்தவாறு உயிர்ப்பூக்கு உதையம்மாகிறது தரணியின் கவிப் பயணம்.
எதற்கையா ஆடம்பரம்…
காலை எழுந்ததும் கை குலுக்கிய நண்பர்கள்
தொலைபேசியில் அழைத்து வாழ்த்துக்கள் பகிர்ந்த உறவுகள்
புதுவருடங்கள் பண்டிகை நாட்களில் பரிமாறும் அன்புகளும்
நட்பின் நட்சத்திரம் என்று தோளில் தட்டி பெருமைகொள்ளும் நண்பரே
என் உணர்வு பகிர்கிறது ஆடம்பரம் ஏன் என்று..
என்றும் இன்புற்று வாழுங்கள் எம் உறவுகளே
ஆடம்;பரமாய் அண்ணன் வளர்த்த பிள்ளை நான்
எல்லா உறவிருந்தும் அண்ணன் இல்லாமல்
அனாதையாக்கப்பட்ட எனக்கு ஆடம்பரம் எதற்கு?
பாசறை தந்த பயிந்தமிழ் நினைவுகள்
தோளோடு தோள் நின்று போரிட்ட தோழர்கள்
நஞ்சு மாலை அணிந்து நயவஞ்சகம் இன்றி
மார்வில் குண்டு பாய்ந்து மடியில் வீழ்ந்தபோது
நாளைய சந்ததிகள் நலமுடன் வாழ்வதற்கு
என் கடமை முடிகிறது போய்வாறேன் தோழா
புன்னகையுடன் மண்மீட்க மடிந்த தோழன் நினைவுகளை விட
ஆடம்பரம் அலங்காரம் அவசியமா?..
நஞ்சு மாலையுடன் நாம் வாழ்ந்த- அந்த
அழகிய நாட்களில் அண்ணன் தந்த அன்பைவிட
பயங்கரம் என்று பயந்து செல்லும் பெண்ணிடையே
துணிந்து நின்று துப்பாக்கி ஏந்தி
தப்பாமல் குறிவைத்து சாதனை படைத்த
எம் தமிழ் வீர மங்கைகள் சாதித்ததை விட
அடிமையாக்கப்பட்ட எனக்கு எதற்கையா ஆடம்பரம்.?
குண்டுகள் பட்டு குருதி வடிந்த போதும்
துண்டாடப் பட்ட அங்கங்கள் துடித்த போதும்
அம்மான்று அழவில்லை அக்கா அண்ணா – என்று
அன்புடன் அழுதோம் தாலாட்டிய தந்தை ஒன்று
தத்தெடுத்து தமிழ் வீரம் ஊட்டிய தந்தை ஒன்று
எதிரியின் கையில் என்னுயிர் மிஞ்சாமல் எஞ்சிய உயிர் மாய்க்க
நஞ்சு மாலையை அழகுபார்த்து வாழ்ந்த வாழ்வை விட
அழவுக்கு அதிகம் பணந்தனை சேர்த்து
அவதியுற்று வாழும் ஆடம்பர வாழ்வு எதற்கோ.?
எனககு இன்பத்துக்கு ஒரு நாள் துன்பத்துக்கு ஒரு நாள்
இடையில் வருவெதெல்லாம் இச்சைகளில் மிச்ச நாள்
வேலுப்பிள்ளை பெற்ற வீரப் புதல்வனின் பிறந்தநாள்
நான் கொண்டாடும் இன்பத்தில் ஆடம்பரமனும் அந்த நாள்
தலைக்கனம் இல்லாமல் தமிழினத்தை காப்பதற்கு
தமிழ்ழினத்தின் தலைமகன் அருகில் துணையிருந்து
அடிமை விலங்குடைக்க ஆயுதப் போர் புரிந்து
தமிழினம் வாழ தன்னுயிர் மாய்த்த
வீரத்தின் விதைகளான மானம் பெரிதென்று
மண்ணுறங்கும் மாவீரரின் மகாத்தான நாள்
தலை குனிந்து மனம் வருந்தி கண்கலங்கும் மறுனாள்…
பாசம் தந்த அண்ணனைப் பிரிந்தோம்
பாசறை தந்த தோழரை இழந்தோம்
எத்தனை எத்தனை ஆடம்பரம் எம் வாழ்வில் கண்டோம்
அத்தனையும் மொத்தமாக இழந்த எனக்கு
எதற்கையா பண்டிகையும் பார்ப்போர் போற்றம் ஆடம்பரமும்.?
உயிர்ப்பூடன்
உதையமாகும்
– தரணி