ஆசியாவின் நோபல் பரிசு என அழைக்கப்படும் ராமன் மக்சாசே விருதினை இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண்ணும், சமூகச் செயற்பாட்டாளருமான கெத்சி சண்முகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவர் நாட்டில் இடம்பெற்ற 30 ஆண்டுகால யுத்தத்தினால், கணவரை இழந்தவர்கள், அநாதரவற்றவர்கள், சிறுவர்கள், போர் வலயத்தில் குண்டுவீச்சு மற்றும் கைதுகளை எதிர்கொண்டவர்கள் போன்றோருக்கு உளவள ஆலோசனை வழங்கியதுடன், ஆசிரியராகவும் செயற்பட்டமைக்காக இவ்விருது வழங்கப்படவுள்ளது.
இவ்விருது எதிர்வரும் 31ஆம் நாள் மணிலாவில் வழங்கப்படவுள்ளது.
பிலிப்பைன்ஸ் அதிபராக இருந்து- 1957ஆம் ஆண்டு விமான விபத்து ஒன்றில் மரணமான ராமன் மக்சாசே நினைவாக, ராமன் மக்சாசே விருது வழங்கப்பட்டு வருகிறது.
இவ்விருது ஆண்டுதோறும் 6 துறைகளுக்கு வழங்கப்பட்டு வருவதுடன், ஆசியாவின் நோபல் பரிசு எனவும் அழைக்கப்படுகின்றது.