தென்பகுதியில் குழப்பத்தை ஏற்படுத்தவே வடக்கில் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்,
வடக்கில் முன்னரை விட தற்போது ஒருபடி அதிகளவில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை பட்டப் பகலில் காவல்துறையினரை விரட்டி விரட்டி வாள்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வாள்வெட்டுத் தாக்குதல்கள், துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் அனைத்தும் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளமையையே காட்டுகின்றன.
தென்பகுதியில் குழப்பத்தை ஏற்படுத்தவே வடக்கில் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். அத்துடன் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷவின் கருத்துக்களும் இச்சம்பவங்களுடன் தொடர்புபடுகின்றன எனத் தெரிவித்தார்.