தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைக் கொலைசெய்வதற்கு திட்டம் தீட்டிய முக்கிய சூத்திரதாரியை நாடுகடத்துவதற்கு சிறிலங்காவின் புலனாய்வுக் குழுவொன்று அவுஸ்ரேலியா புறப்படுகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைக் கொலைசெய்வதற்கு இரண்டு தடவைகள் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
அத்துடன் கடந்த ஜனவரி மாதம் 15ஆம் நாள் சுமந்திரனைக் கொலைசெய்யத் திட்டமிட்டதாக தெரிவிக்கப்பட்டு மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மாவட்டங்களைச் சேர்ந்த நால்வர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டனர்.
இவர்களிடமிருந்து கிளைமோர்கள் மற்றும் போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டதாகவும், சுமந்திரனைக் கொலைசெய்ய சர்வதேச போதைப்பொருள் கடத்தல் காரர்களுடன் தொடர்பு பேணப்பட்டதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இத்தாக்குதலுக்குத் திட்டமிட்ட பிரதான சந்தேகநபர் அவுஸ்ரேலியாவில் வசிப்பதாகவும், அவரை சிறிலங்காவுக்கு நாடுகடத்துவதற்குரிய ஆவணங்களுடன் குற்றப் புலனாய்வைச் சேர்ந்த குழுவொன்று அவுஸ்ரேலியா பயணமாகவுள்ளது எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.