வட மாகாணசபையின் புதிய உறுப்பினராக யாழ்ப்பாண வணிகர் கழகத் தலைவர் ஜெயசேகரம் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார்.
மாகாணசபையின் அங்கத்துவக் கட்சிகளுக்கான சுழற்சிமுறை ஆசனம் இம்முறை தமிழரசுக் கட்சிக்கு வழங்கப்படுகின்றது.
இதற்கமைய புதிய உறுப்பினர் நியமனத்தை தமிழரசுக் கட்சி ஜெயசேகரத்துக்கு வழங்கியுள்ளது. இது தொடர்பாக தேர்தல்கள் திணைக்களத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
முதலில் இருந்த ரெலோ அமைப்பைச் சேர்ந்த மயூரனின் காலம் நிறைவடைந்ததையிட்டே ஜெயசேகரம் இன்று பொறுப்பேற்கவுள்ளார்.