அரசியல் கைதிகளின் உறவினர்கள் இன்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்தனர்.
நீண்டகாலமாகச் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் தமது உறவினர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
யாழ்ப்பாணம்இ முல்லைத்தீவுஇ கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எஸ்.சிவயோகம் தலைமையில் முதலமைச்சரைச் சந்தித்தனர்.
தமிழ் அரசியல் கைதிகள் விடயம் தொடர்பாக மிக விரைவில் சட்டமா அதிபருடன் பேசுவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றேன். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில் அதிக கவனத்தை தொடர்ந்தும் செலுத்துவோம் என்று வடக்கு முதலமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.