எங்களுடைய பன்முக நிதியை மக்களுக்குப் பகிர்ந்தளிப்பதற்கு முடியாதவாறு தேசிய கொள்கைகள் பிராந்திய அமைச்சர் சரத் பொன்சேகா தடைவிதித்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வாழைச்சேனை நாசிவந்தீவு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் இடம்பெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், நாடாளுமன்ற பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து கிடைக்கப்பட்ட சுற்றுநிருபத்துக்கமைய, பாடசாலைகளுக்கு எந்தப் பொருட்களும் வழங்கமுடியாது.
தற்போது தேசிய கொள்கைகள் அமைச்சின் வேலைத்திட்டத்தை பிராந்திய அமைச்சர் சரத்பொன்சேகாவிடம் வழங்கப்பட்டுள்ளது.
அவர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட பன்முகப்பட்ட நிதியைக் கூட இராணுவத்தைப் போன்றுதான் செயற்படுத்தி வருகின்றார்.
எங்களது நிதியை எங்களது மக்களுக்கு பகிர்ந்தளிக்கமுடியாதவாறு தடைகளை ஏற்படுத்தி வருகின்றார்.
இந்த வருடம் பாடசாலைகளுக்கென ஒதுக்கப்பட்ட பன்முகப்பட்ட நிதிகள் அனைத்தும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
ஆகையால் பாடசாலைச் சமூகத்துக்கு வழங்கிய வாக்குறிதியை எம்மால் காப்பாற்றமுடியாமல்போய்விட்டது எனத் தெரிவித்தார்.