தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் ஈபிஆர்எல்எவ், புளொட், ஈரோஸ் அமைப்புக்கள் தமிழரசுக்கட்சியைப் புறந்தள்ளிவிட்டு கூட்டாக இயங்க தீர்மானித்துள்ளன. இது தொடர்பாக மூன்று கட்சிகளினதும் தலைவர்கள் நேற்றிரவு வவுனியாவிலுள்ள விடுதியொன்றில் கூடி முடிவெடுத்துள்ளனர்.
அண்மைக் காலமாக கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழரசுக் கட்சி தன்னிச்சையாக சில முடிவுகளை எடுத்து இயங்குவது மற்றைய கட்சிகளை அதிருப்திக்குள்ளாக்கிய நிலையில், ஆயுதப் போராட்டத்தின் வழிவந்த குறித்த மூன்று கட்சிகளும் இணைந்து இயங்க முடிவெடுத்துள்ளன.
அத்துடன் இதுவரை காலமும் தமிழரசுக் கட்சியின் தொடர்பில் அமைதிகாத்து வந்த சித்தார்த்தனும் செல்வம்அடைக்கலநாதனும், அண்மையில் மாகாணசபையில் ஏற்பட்ட குழப்பத்தினால் தீர்க்கமான முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் இவ்வாறான கூட்டங்கள் கூடி தீர்மானங்கள் எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.