பிலிப்பைன்ஸின் மின்டானாவோ தீவில் இன்று அதிகாலை 5.8 ரிக்டர் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் சுமார் 34 கிலோமீட்டர் தூரத்திலும், கடலுக்கு அடியே சுமார் 74 கிலோமீட்டர் ஆழத்திலும் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கதினை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பதுடன் சேதம் குறித்த உடனடி தகவல்களும் வெளியாகவில்லை.
கடந்த 1990-ம் ஆண்டு வடக்கு பிலிப்பைன்ஸில் 7.7 ரிக்டர் அளவிலட ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 2 ஆயிரம் பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.