சென்னை: தற்போது எல்லாவற்றுக்கும் மத்திய அரசு ஆதார் கார்டு அவசியம் என்று கூறிவரும் நிலையில் இறப்புக்கும் ஆதார் கார்டு என அறிவித்ததாக ஒரு செய்தி வெளியானது. 2000 ஆண்டுகளுக்கு முன்னாடியே திருவள்ளுவரும் கூட ஆதார் பற்றி தெரிவித்துள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு கருத்து வைரலாக பரவி வருகிறது. மத்திய மாநில அரசுகளின் நலத்திட்டங்களை பெற ஆதார் அவசியம் என அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சமையல் எரிவாயு மானியம், ரேஷன் பொருட்கள் பெற, முதியோர் உதவித் தொகை, குழந்தைகள் உண்ணும் சத்துணவு என அனைத்து திட்டங்களுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அண்மையில் இறப்பு பதிவுக்கும் ஆதார் என மத்திய அரசு அறிவித்ததாக வெளியான செய்தி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால் இறப்பு பதிவுக்கும் ஆதார் அவசியம் என கூறவிட்டது மத்திய அரசு.