கேப்பாப்புலவில் அமைந்துள்ள முல்லைத்தீவு இராணுவத் தலைமையகத்தை அகற்றுவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்றை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
குறித்த இராணுவத் தலைமையகத்தை அகற்றுவதன் மூலம் பொது மக்களுக்கு சொந்தமான 111 ஏக்கர் காணியை விடுவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அமைச்சரவைப் பத்திரம் அடுத்தவாரம் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் புனர்வாழ்வு, மீள்குடியேற்ற மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனால் முன்வைக்கப்படவுள்ளது.
இந்நிலையில், முல்லைத்தீவு இராணுவத் தலைமையகத்தை வேறொரு இடத்தில் அமைப்பதற்கு 48 மில்லியன் ரூபாவை புனர்வாழ்வு, மீள்குடியேற்ற மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு வழங்கவுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது