கிளிநொச்சி – இரணைமடு குளத்தின் கீழ் உள்ள சிறுபோக செய்கையில் அதிகளவான பயிர்செய்கைக்கு போதியளவு நீரின்மையால் கடும் பாதிப்புக்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை காணப்படுகிறது. இந்த நிலையில் எஞ்சியுள்ள பயிர்களை கட்டாக்காலி கால்நடைகள் தொடர்ச்சியாக அழித்து வருகின்றன.
இவ்வாறான கால்நடைகளை கட்டுப்படுத்துவதற்கான திகதி அறிவிக்கப்பட்டு தற்போது நடைமுறையிலுள்ள போதும், சில பண்ணையாளர்கள் தமது கால்நடைகளை கட்டாக்காலிகளாக விட்டுள்ளனர். இதனால் அவை பயிர்களுக்கு பெரும் அழிவினை ஏற்படுத்தி வருகின்றன.
குறித்த சிறுபோக செய்கைக்கு ஒதுக்கப்பட்ட காணிகளுக்கு 7.5 மில்லியன் ரூபா செலவில் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இருப்பினும் அவற்றையும் மீறி சில பண்ணையாளர்கள் கால்நடைகளை பயிர்களுக்குள் விட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். அத்துடன் இவ்வாறான கால்நடைகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.