ஆவா குழுவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் என நம்பப்படும் நிஷா விக்டர் எனும் புனைப்பெயரை கொண்ட இனுவில் நிஷாந்தன் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நால்வரும் குற்றப்புலனாய்வு விசாரணைப் பிரிவினரால் இன்று கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் அண்மை காலமாக வாள் வெட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையிலேயே, குறித்த நால்வரும் இன்று கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.