தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் மகளீர் அணியினர் பயன்படுத்திய இசையரசி என்னும் தாக்குதல் படகு அண்மையில் புதுமாத்தளன் பகுதியில் இருந்து இராணுவத்தினரினால் இடம்மாற்றப்பட்டது.
குறித்த படகு புதுக்குடியிருப்பு பெருங்காட்டுப் பகுதி இராணுவ முகாம் வளாகத்தில் ஏனைய தாக்குதல் படகுகளுடன் பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற மாணவிகள் சிலர் இந்த இந்த தாக்குதல் படகுகள் தொடர்பிலும் ஆய்வு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், அங்கே விடுதலைப்புலிகள் தொடர்பில் இராணுவத்தினர் எழுதி காட்சிப்படுத்திய தகவல்கள் தொடர்பிலும் அவர்கள் ஆராய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் நடந்து முடிந்த யுத்தம் தொடர்பிலும் யுத்தத்தில் கலந்துகொண்ட இருதரப்பிற்கும் இடையில் உள்ள நியாயம் தொடர்பிலும், உள்நாட்டு இளைஞர் மற்றும் யுவதிகள் தீர விசாரித்து அறிந்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருவதாக சமூகவியல் ஆய்வு அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.