நேற்று கொண்டாடப்பட்ட நண்பர்கள் தினத்தை முன்னிட்டு, புகழ்பெற்ற மணற்சிற்பியான சுதர்ஷன் பட்னாயக்கால் இச் சிற்பம் எழுப்பப்பட்டுள்ளது.
சமாதான சின்னமான புறாவுடன், இந்தியா மற்றும் சீனாவின் தேசியக் கொடிகளை கொண்டு, சுமார் ஐந்து அடி உயரத்திற்கு இச் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.
இச் சிற்பத்தைக் காண பெருமளவான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கூடியதோடு, புகைப்படங்களையும் எடுத்துச் சென்றனர்.
இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையில் நீடிக்கும் எல்லைப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு எட்டப்படாத நிலையில், இரு நாடுகளும் எல்லையில் தமது துருப்புக்களை வலுப்படுத்தி வருவதோடு, போர் ஆயுதங்களையும் அதிகரித்து வருகின்றன. இதனால் எல்லையில் அதிகரித்துள்ள பதற்றத்தை தணிக்க பல்வேறு சமாதான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் நீடிக்கும் எல்லைப்பிரச்சினை தீர்க்கப்பட்டு அமைதி நில வேண்டும் என்பதை வலியுறுத்தும் மனற்சிற்பமொன்று, பூரி புனித நகரில் அமைக்கப்பட்டுள்ளது.