இந்திய வீரர் ஸ்ரீசாந்த் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை கேரள உயர்நீதிமன்றம் நீக்கியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் ஆக்ரோஷமான பந்துவீச்சாளர் என பெயர் பெற்றவர்.
கடந்த 2013ல் நடந்த ஐபிஎல் தொடரில் ஸ்ரீசாந்த் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு விசாரணையில் நிரூபணம் ஆனது.
இதனையடுத்து ஸ்ரீசாந்த் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட பிசிசிஐ வாழ்நாள் தடை விதித்தது.
இதனை எதிர்த்து டெல்லி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஸ்ரீசாந்துக்கு விதித்த தடையை நீக்கி நீதிமன்றம் உத்தரவிட்டது, ஆனால் பிசிசிஐ தடையை நீக்கவில்லை.
இதே போல, தடையை நீக்க கோரி கேரள உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது, அதன் தீர்ப்பு இன்று வந்துள்ளது.
ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை உத்தரவு நீக்கப்படுவதாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இருந்த போதிலும், பிசிசிஐ தன்னாட்சி அமைப்பாக உள்ளதால் அதனிடம் தடைநீக்கச் சான்று பெற்றால் மட்டுமே ஸ்ரீசாந்த் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.