இந்த ஆண்டின் முதல் சந்திரகிரகணம்… தட்ப வெப்பத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது
சென்னை : கோட்டூர்புரம் பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு தொலைநோக்கி மூலம் சந்திரகிரகணத்தை சென்னைவாசிகள் பார்த்து மகிழ்ந்தனர். இந்த சந்திரகிரகணத்தால் தட்ப வெப்பத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது என்று பிர்லா கோளரங்க இயக்குநர் கூறியுள்ளார். இந்தியாவில் கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் 11 ம் தேதி ஒரு பகுதி சந்திர கிரகணம் தெரிந்தது.
இந்நிலையில் 6 மாத இடைவெளிக்குப்பிறகு இந்தியாவில் நேற்று இரவு சந்திரகிரகணம் காணப்பட்டது. இந்த சந்திரகிரகணத்தை ஆசியா கண்டத்தில் உள்ளவர்களும் ஆஸ்திரேலியா நாட்டு மக்களும் முழுமையாக காண முடிந்தது. ஐரோப்பா, ஆப்பிரிக்கா கண்டத்தை சேர்ந்தவர்கள் சந்திரகிரகணத்தின் ஒரு பகுதியை மட்டுமே காண முடிந்தது. நான்கு கண்டங்களிலும் இந்த சந்திரகிரகணத்தை இந்த ஆண்டு நேற்றுதான் காண முடிந்தது. சந்திர கிரகணம் நேற்று இரவு 10.53 மணிக்கு தொடங்கி 8ம் தேதி அதிகாலை 00.48 வரை நீடித்தது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கில் தொலைநோக்கி மூலம் பொது மக்கள் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தொலைநோக்கி மூலம் பொதுமக்கள் வரிசையாக பார்த்து ரசித்தனர். இந்த கிரகணத்தால் தட்ப வெப்பத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது. புறநிழல் பகுதியில் சந்திரன் போகும் போது அதை நாம் பார்க்க முடியும். இந்த ஆண்டில் இது முதல் சந்திர கிரகணம் என்று சென்னை கோளரங்க இயக்குநர் கூறியுள்ளார்.