சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் லட்சுமிபுரம் கிராமத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்த லட்சுமிபுரத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சொந்தமான நூறு ஏக்கர் நிலத்தில் 200 அடி ஆழம் கொண்ட 4 கிணறுகளை வெட்டியுள்ளார். இதனால் லெட்சுமிபுரத்தில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி கிராம மக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கிராம மக்களுடன் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பேச்சுவார்த்தை நடத்தினார்.