இங்கிலாந்தில் நேற்று நடத்தப்பட்ட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வெனிசுவேலாவில் நடைபெற்று வரும் மோதல்களை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என பிரித்தானிய தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் உரையாற்றுகையில், “நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். வெனிசுவேலாவில் உள்ள பிரச்சினைக்கு மோதல்கள் மூலம் தீர்வு காண முடியாது” என தெரிவித்துள்ளார்.
இருப்பினும், வெனிசுவெலா ஜனாதிபதி நிக்கோலஸ் மடூரோ தொடர்பில் அவர் எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
மடூரோவின் நடவடிக்கைகளுக்கு எதிராக உலக நாடுகள் பல கடும் கண்டனம் தெரிவித்துள்ள போதிலும், அவர் தொடர்பில் கோர்பின் எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வெனிசுவேலாவின் நெருங்கிய நண்பர்களாக பிரித்தானிய அரசியல்வாதிகள் காணப்படுகின்றனர் என முன்னதாக நிக்கோலஸ் மடூரோ தெரிவித்திருந்தமையே, கோர்பினின் அமைதிக்கு காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.