இனவாத வன்முறைகள் எழலாம் எனும் அச்சம் ஒருபுறம் மக்களை வாட்டி வரும் நிலையிலேயே இந்த தேர்தலில் மக்கள் வாக்களித்து வருவதாக அண்மைய செய்திகள் தெரிவிக்கின்றன.
கென்யாவின் ஜனாதிபதியான உஹூரு கென்யாட்டா (55), இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் பொருட்டு குறித்த தேர்தலில் களமிறங்கியுள்ளார்.
அவருக்கு போட்டியாக ஆபிரிக்காவின் முதலாவது துணை ஜனாதிபதியின் மகனும் முன்னாள் அரசியல் கைதியுமான ரைலா ஒடின்கா (வயது 72) களமிறங்கியுள்ளார்.
குறித்த தேர்தலில் 50 சதவீதத்திற்கும் மேலதிகமாக ஒரு வாக்கை பெறுபவரே வெற்றியாளராக கருதப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 104 வயதுடைய மூதாட்டி ஒருவர் வன்முறைகளில் இருந்து தங்களை காக்க வேண்டும் என பிரார்த்தனை நடத்தியே குறித்த தேர்தலில் வாக்களிக்கச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வன்முறைகளை தவிர்த்து அமைதியான முறையில் தேர்தலில் வாக்களிக்குமாறு ஜனாதிபதி கென்யாட்டாவும் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.