தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு சொந்தமான கிணறு ஒன்றினை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகின்றது.
வறட்சி தலைதூக்கியுள்ள நிலையில் குறித்த கிணற்றினை மக்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரி லட்சுமிபுர கிராம மக்கள் கடந்த இரு தினங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தமது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றிவைத்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, மேற்படி கிணற்றினை தமக்கு வழங்கும் வரை பலவிதமான போராட்டங்களை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறிருக்க கிணற்றினை பொதுமக்களுக்கு வழங்குவது தொடர்பில், முன்னாள் முதலமைச்சர் பன்னீர் செல்வம் தரப்பில் எவ்வித ஆட்சேபனையும் தெரிவிக்கப்படவில்லை. எனினும் அது குறித்த எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.