பிரெக்சிற்றின் பின்னர் எவ்வாறு பிரித்தானியாவில் நடைமுறையில் உள்ள சட்டதிட்டங்கள் பல, ஐரோப்பிய நீதிமன்றத்தால் கட்டுப்படுத்தப்படும் நிலையிலேயே அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா விலகியமையின் பின்னர், ஐரோப்பிய நீதிமன்றால் விதிக்கப்பட்ட சட்டதிட்டங்கள் எவ்வாறு மாற்றமடையும் என்பது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதே வேளை ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா விலகிமையின் பின்னர், பிரித்தானியாவின் தீர்மானங்களில் ஐரோப்பிய நீதிமன்றம் அதிகாரம் செலுத்தாது என பிரதமர் தெரேசா மே உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.