வவுனியா – மரக்காரம்பளை கிராம சேவகர் பிரிவிற்கு உட்பட்ட கணேசபுரம் கிராமத்திலுள்ள 30 குடும்பங்களைச் சேர்ந்த மக்களே தங்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்து வந்த மக்கள் மற்றும் இந்தியாவிற்கு அகதிகளாக சென்று தாயகம் திரும்பிய மக்களை 2004ஆம் ஆண்டு கணேசபுரம் கிராமத்தில் மீள்குடியேற்றம் செய்த போதும் அன்று தொடக்கம் வீட்டுத்திட்டம் வழங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
அத்துடன் மழை காலங்களில் இடப்பெயர்வுகளை சந்திப்பதுடன், வீட்டுத்திட்டம் வழங்குவதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இன்று பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் இல்லாத காரணத்தினால் சுமார் ஒரு மணிநேரம் வரை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு பின்பு கலைந்து சென்றனர்.