யாழில் இயங்கி வந்த ஆவா குழுவின் செயற்பாடுகள் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த குழுவின் தலைவர் உள்ளிட்ட 12 முக்கிய உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், ஆவா குழுவுடன் தொடர்புடைய முக்கிய உறுப்பினர்கள் இருவர் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, கைது செய்யப்பட்டுள்ளவர்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் உள்ளடங்குவதாகவும் பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், ஆவா குழுவினர் புலம்பெயர் சமூகத்துடன் தொடர்புகளை பேணி வருவதாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மேலும் தெரிவித்துள்ளார்