புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக சமுர்த்தி பயனாளிகள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், சமுர்த்தி இடைநிறுத்தப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மாவட்ட அரசாங்க அதிபரின் உதவிச் செயலாளர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது, சமுர்த்தி தொடர்பான ஆய்வொன்று நடைபெற்று வருவதன் காரணமாகவே தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அவரிடம் மகஜரொன்றை கையளித்துள்ளனர்.