சிரியாவின் ஜோர்தான் பகுதியில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் சுமார் 23 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர்.
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அதிபர் ஆசாத் தலைமையிலான அரசு படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றது. இதனிடையே கிளர்ச்சியாளர்கள் படை மற்றும ஐ.எஸ் தீவிரவாதிகள் படைகள் ஒன்றின் மீது ஒன்று தாக்குதல் நடத்தும்.
இந்நிலையில், சிரியாவின் ஜோர்தான் பகுதியில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் சுமார் 23 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர். அதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
நசிப் எல்லைக்கு அருகில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக, மனித உரிமைக்கான சிரிய கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் ஐ.எஸ். அமைப்பினர் தான் இந்த தற்கொலைப் படை தாக்குதலில் ஈடுபட்டிருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.
சிரியவின் தெற்கு டாரா மாகாணத்தில் உள்ள நசிப் எல்லைப் பகுதி கடந்த 2015 ஏப்ரம் மாதம் கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.