சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ விடுதலைப்புலிகளுடன் யுத்தம் செய்ய விரும்பவில்லை. பேச்சுவார்த்தை செய்யத்தான் விரும்பினார். நாங்கள்தான் யுத்தம் செய்வதற்கு தள்ளினோம் என மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், ஒற்றையாட்சி என்ற பெயரில் தமிழர்க்கு சமஷ்டியை வழங்கி அதனுாடாக நாட்டை இரண்டாகப் பிரிப்பதற்கு இந்தத் தேசிய அரசிலுள்ள சிலர் சதி செய்கின்றனர். மஹிந்த ஆட்சியிலும் இவ்வாறானவர்கள் இருந்தனர். உண்மையில் இந்த இரண்டு பிரதான கட்சிகளும் ஆரம்பத்தில் சமஷ்டி என்ற நிலைப்பாட்டில்தான் இருந்தன. நாங்கள் தான் இவர்களை ஒற்றையாட்சி என்ற நிலைப்பாட்டுக்கு கொண்டுவந்தோம்.
நாம் ஒற்றையாட்சி பற்றி பேசிய போது சந்திரிகாவும் மஹிந்தவும் சமஷ்டி நிலைப்பாட்டில் இருந்தனர். கோட்டாபய ராஜபக்ச அமெரிக்காவில் இருந்தார். விமல் வீரவன்ஸ வேறொரு சிந்தனையில் மூழ்கியிருந்தார்.
2015இல் மஹிந்த ஆட்சிக்கு வந்த போது அவர் விடுதலைப்புலிகளுடன் யுத்தம் செய்வதற்கு இருக்கவில்லை. பேச்சு நடத்தவே திட்டமிட்டார். டிரான் அலஸின் ஊடாக புலிகளுடன் தொடர்பை ஏற்படுத்தினார். ஜெனிவாவில் விடுதலைப்புலிகளுடன் பேச்சைத் தொடங்கினார். ஆனால் நாம்தான் மஹிந்தவை யுத்தத்திற்கு தள்ளினோம்.