உங்களுக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும் என்னை அழையுங்கள். அமெரிக்கத் தூதுவர் என்ற முறையில் என்ன உதவி தேவையென்றாலும்நான் செய்யத் தயாராக உள்ளேன் என அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார்.
இன்று யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனுக்கும் சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவருக்குமிடையில் கொழும்பில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது நீதிபதியைக் கண்ட தூதுவர் அதுல் கெசாப் கட்டியணைத்து கைலாகு கொடுத்ததுடன்,துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின்போது நீதிபதி இளஞ்செழியன் நடந்து கொண்ட விதம் குறித்து பாராட்டியுள்ளார்.
சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்ற குறித்த சந்திப்பின்போதுபல்வேறு விடயங்கள் தொடர்பாகப் பேசப்பட்டதாகத் தெரியவருகின்றது.
அத்துடன், நீதிபதி இளஞ்செழியனுக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும் தன்னுடன் தொடர்புகொள்ளுமாறும், தான் அமெரிக்கத் தூதுவர் என்ற ரீதியில் உதவி செய்யத் தயாராக இருப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.
மேலும், நீதிபதி இளஞ்செழியனின் உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரின் மனைவியின் காலில் விழுந்து கும்பிட்ட சம்பவம் தன்னை மிகவும் நெகிழ வைத்ததாக அதுல் கெசாப் நீதிபதி இளஞ்செழியனிடம் தெரிவித்துள்ளார்.