பிணை கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை மூடி மறைக்கும் நோக்கில் தமது குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் கைது செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இவ்வாறு கைது செய்ய திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
டுவிட்டர் கணக்கில் பதிவொன்றை பதிவிட்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
ரகர் வீரர் வசீம் தாஜுடீன் கொலை தொடர்பிலான விசாரணைகளுக்கு வாக்குமூலம் வழங்குவதற்காக ஷிரந்தி ராஜபக்ச இன்று குற்ற விசாரணை திணைக்களத்தில் ஆஜராகவுள்ளார் அத்துடன் நாளைய தினம் யோஷித ராஜபக்ச ஆஜராகவுள்ளார்.
இந்த நிலையில் நாமல் தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று இவ்வாறு பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.