அனைத்து மாகாணசபைகளினதும் தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்துவது குறித்து வர்த்தமானி அறிவித்தல் மூலம் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள 20ம் திருத்தச் சட்டத்தை உச்ச நீதிமன்றிற்கு சமர்ப்பித்தால் அதற்கு எதிராக பத்து மனுக்களை தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
சிவில் அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் இவ்வாறு மனுக்களை தாக்கல் செய்ய உள்ளன.
20ம் திருத்தச் சட்டம் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டு இரண்டு வாரங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில், எந்த நேரத்தில் அதனை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க முடியும்.
அதற்கு முன்னதாக இந்த திருத்தச் சட்டம் தொடர்பில் உச்ச நீதிமன்றிடம் ஜனாதிபதி சட்ட விளக்கம் கோருவார்.
எதிர்வரும் மாதத்தில் வடமத்திய, சபரகமுவ மற்றும் கிழக்கு மாகாண சபைகளின் பதவிக் காலங்கள் பூர்த்தியாக உள்ளன.
இந்த நிலையில் அனைத்து மாகாணசபைகளினதும் தேர்தலை ஒரே நாளில் நடாத்துவதனை நோக்காகக் கொண்டு இந்த திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளது.