மொட்டை சிவா கேட்ட சிவா படத்தில் மக்கள் சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்தை போட்டதின் மூலம் அச்சமயம் சர்ச்சைகளை சந்தித்தார் ராகவ லாரன்ஸ்.
இந்த படத்தில் ஒரு காட்சியில் கலவரத்தில் இறந்த காவல் அதிகாரிகளின் புகைப்படங்களை காண்பிக்கும் காட்சி இடம் பெற்றிருக்கும். இதில் இயக்குனர் சாய் ரமணி அறிவுரை பெயரில் உண்மையாக கலவரத்தில் இறந்து போன காவல் அதிகாரிகளின் புகைப்படங்களை நெட் மூலம் ஆராய்ந்து புகைப்படங்களை எடுத்துள்ளனர்.
அவர்கள் காட்டிய சில புகைப்படங்களில் தற்போது ஒரு காவல் அதிகாரி உயிருடன் தான் இருக்கிறார். சமீபத்தில் இப்படத்தை பார்த்த அந்த காவல் அதிகாரி அதிர்ச்சியடைந்துள்ளார். இதை கூட தெரியாமல் என் அனுமதியில்லாமல் புகைப்படத்தை உபயோக படுத்தியுள்ளனர் என்று வழக்கு தொடரவுள்ளாராம்.
இதனையொட்டி ராகவா லாரன்ஸ் உட்பட மொட்டசிவா கெட்ட சிவா படக்குழுவுக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளார்.