செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீதான சிறிலங்கா வான்படையின் குண்டுத்தக்குதல் இடம்பெற்று 11 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறதன. முகப்புத்தகத்தில் இது தொடர்பான செய்திகளையும்,அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றதற்கான செய்திகளும் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படுகொலை சம்பவத்திற்கு விடுதலைப்புலிகள் தான் காரணம் என்பதைப்போல சிலர் பதிவுகளை இட்டு வருகின்றனர்.
அண்மைக்காலமாக (2009 பின்னர்) நடுநிலைவாதிகள்,இலக்கியவாதிகள் என்ற அடைமொழிகளை தமக்குத்தாமே சூடிக்கொண்டுள்ள சிலர் எல்லா இடங்களிலும் விடுதலைப்புலிகளை கொச்சைப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். இப்படிப்பட்டவர்கள் தாம் விடுதலைப்புலிகள் காலத்தில் விடுதலைப்புலிகளின் நிர்வாக செயலககங்களில் பெரும் பொறுப்புக்களில் இருந்ததாகவும் தமக்கு அப்போது எழுத்து சுதந்திரம் மறுக்கப்பட்டு வந்ததாகவும் விடுதலைப்புலிகளின் ஊடகங்களில் பணியாற்றிய சிலர் இப்போது கூறிவருவதை காணமுடிகிறது.
செஞ்சோலை சிறுவர் இல்லம் மீதான விமானத்தாக்குதல் இடம்பெற்ற போது நான் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் தான் நின்றிருந்தேன். காலை 6.00 மணியிருக்கும் திடீரென வான்பரப்புக்குள் நுழைந்த சிறிலங்கா வான்படையின் இரண்டு கிபிர் விமானங்கள் புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் பகுதியில் இருந்த செஞசோலை சிறுவர் இல்லத்தின் மீது குண்டுத்தாக்குதலை நடத்திவிட்டு மறைய 61 மாணவிகள் உடல் சிதறி பலியானதுடன் 100 இற்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயமடைந்திருந்தனர். அன்று இந்த சம்பவம் வன்னி எங்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. சம்பவம் சடந்து ஒரு சில நிமிடங்களுக்குள் விமானத்தாக்குதல் இடம்பெற்ற இடத்திற்கு நேரில் சென்றிருந்தேன்.
அங்கு சென்ற போது இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த மாணவிகளையும்,கூக்குரல் ஏழுப்பியவாறு காயமடைந்த மாணவிகளையும், காயப்பட்டவர்களையும் ,இறந்தவர்களையும் அந்த இடத்திலிருந்து வேகமாக இப்புறப்படுத்திக்கொண்டிருக்கும் ஊர் பொது மக்களையும் பார்க்க முடிந்தது. 11 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த அந்த கொடிய நிகழ்வை யாராலும் மிக எழிதாக கடந்து போக முடியாது.
இவ்வாறு தாக்குதல் இடம்பெற்ற இடத்தினை பார்வையிட்டு விட்டு கிளிநொச்சி திரும்புகிறேன். காலை 11.30 மணிக்கு விடுதலைப்புலிகளின் சமாதானச் செயலகத்தில் UNHCR வன்னி வதிவிடப்பிரதிநிதிக்கும் விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அசர்களுக்குமான சந்திப்பு இடம்பெறுகிறது. இந்த சந்திப்பில் மாணவிகளின் படுகொலை தொடர்பான கண்டனத்தை விடுதலைப்புலிகள் UNHCR பிரதிநிதியிடம் தெரிவிக்கின்றனர். அப்போது UNHCR பிரதிநிதியும் செஞ்சோலைப்பகுதிக்கு தாமும் பல தடவை சென்று வந்ததாகவும் அங்கு விடுதலைப்புலிகளோ அல்லது வேறு எந்த இராணுவ செயற்பாடு நடந்ததாகவோ தான் அறிந்திருக்கவில்லை என்பதையும் கூறினார்.
இப்போது விடயம் என்னவெனில் சிலர் அரசாங்கம் சொல்வதைப்போல விடுதலைப்புலிகள் மாணவிகளுக்கு ஆயுதப்பயிற்சி வழங்கினார்கள் அது விடுதலைப்புலிகளிம் பயிற்சி முகாம் அதனால்தான் தாக்குதல் நடத்தினோம் என்று கூறுவதைப்போல விடுதலைப்புலிகள் தான் பிள்ளைகளை பயிற்சிக்கு கொண்டு போனார்கள் அதனால் தான் தாக்குதல் நடத்தப்பட்டது என்று அரசாங்கத்திற்கு வெள்ளையடிக்க புறப்பட்டுள்ளனர்.
விடுதலைப்புலிகள் மாணவிகளை பயிற்சிக்கு கொண்டு சென்றது உண்மையே, ஏனெனில் போர்காலத்தில் வன்னியில் எந்த நேரம் எந்த இடத்தில் விமானத்தாக்குதலோ அல்லது எறிகணை தாக்குதலோ இடம்பெறலாம் என்ற சூழ்நிலையே நிலவியது அவ்வாறான காலப்பகுதியில் இராணுவத்தின் எறிகணை தாக்குதலில் இருந்தும் விமானக்குண்டுவீச்சிலிருந்தும் மக்கள் தம்மை தற்காத்துக்கொள்சதற்கான தற்காப்பு பயிற்சிகள் அவசியம் தேவைப்பட்டது. அதன் விளைவாகவே வன்னியில் போர்காலத்தில் இருந்த இத்தனை பேரு்ம் தற்காப்பு பயிற்சிகளை பெற்றனர். எவராவது நான் தற்காப்பு பயிற்சி எடுக்காமல் வன்னியில் இருந்தேன் என்று கூற முடியாது.அன்று விடுதலைப்புலிகள் பொது மக்களுக்கு போராயுதங்கள் தொடர்பான அறிவை புகட்டாமல் விட்டிருந்தால் அல்லது எந்த செல்லுக்கு எப்படி நிலையெடுக்க வேண்டும் என்பதை கற்றுக்கொடுக்காமல் விட்டிருந்தால் அல்லது எந்த தாக்குதலுக்கு எந்த வகையான பதுங்கு குழிகளை அமைப்பது என்பதை காட்டிக்கொடுக்காமல் விட்டிருந்தால் முள்ளிவாய்க்கால் இறுதிப்போரில் 50 ஆயிரம் மக்கள் கூட எஞ்சியிருக்க மாட்டார்கள். இதை ஏன் சொல்கிறேன் எனில் 2009 மே 18 அன்று வட்டுவாகல் வழியாக இடம்பெயர்ந் பெருந்தொகை மக்களைப்பார்த்து இராணுவமே வியந்து நின்றது. அது என்ன வெனில் தாம் மேற்கொண்ட இப்படிப்பெரிய தாக்குதலில் இருந்து எவ்வாறு இத்தனை லட்சம் பேர் ஒரு குறுகிய நிலப்பரப்பிற்குள் வாழ்ந்தார்கள் என ஏக்கத்துடன் பார்த்தனர். இதற்கு காரணம் விடுதலைப்புலிகள் தமது மக்களுக்கு போர் தொடர்பான முழு விடயங்களையும் அனுபவரீதியாக பயிற்றுவித்தமையேயாகும்.
வன்னியில் போர் உக்கிரமடைந்த போது இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவும்,UNHCR,ICRC போன்ற வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்க மறுத்த சிறிலங்கா அரசபடைகள் மக்கள் மீது தாக்குதலை மேற்கொள்ளத்தவறவில்லை. தொண்டு நிறுவனங்களின் கோரிக்கைக்கு செவி மடுக்காத சிங்கள அரசின் தாக்குதலில் இருந்து தமது மக்களை பாதுகாக்க அவர்களுக்கு தற்காப்பு பயிற்சிகளை வழங்குவதை விட வேறு வழியிருக்கவில்லை விடுதலைப்புலிகளுக்கு. எனவே இங்கு தான் நடுநிலை நக்கிகளும்,இலக்கியவாதிகளும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.
விடுதலைக்காக போராடிய விடுதலைப்புலிகள் தாம் வாழ்வதற்காக எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளாது தம்மை நம்பிய மக்களை பாதுகாத்து அவர்களுக்கான ஒரு நிலையான தீர்வை பெற்றுக்கொடுக்கவே போராடினார்கள். அதற்காகவே தமது உடல்,பொருல்,ஆவி அனைத்தையும் உவந்தளித்தார்கள். இப்போது விடுதலைப்புலிகளை நோக்கி நீழுகின்ற ககைகள் ஒரு நாள் விடுதலைப்புலிகளை மீட்பர்களாக எண்ணி கைகூப்பி கும்பிட்டதை மறந்து விடக்கூடாது.
இறுதியாக விடுதலைப்புலிகளை காட்டிக்கொடுத்து வயிறு வளர்க்கும் கூட்டத்தினரே ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் நீங்கள் விடுதலைப்புலிகளை காட்டிக்கொடுக்கவில்லை. உங்கள் சந்ததியை காட்டிக்கொடுக்கிறீர்கள் அது மட்டுமல்ல நீங்களே உங்களின் அடுத்த சந்ததிக்கான அடிமை சாசனத்தில் கையொப்பம் வைக்கிறீர்கள் மறந்து விடாதீர்கள்.
-சிவகரன்