குவாம் மீது தாக்குதல் நடத்தப் போவதாக கடந்த வாரம் வடகொரியா அறிவித்ததை அடுத்து, பதற்றம் அதிகரித்தது.
வடகொரியாவில் இருந்து தற்போது கிடைக்கும் தகவல்கள், அதிகரித்து வரும் வார்த்தைப் போர், தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
குவாம் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தும் திட்டத்தை கிம் ஜான்-உன் நீண்ட நேரம் ஆய்வு செய்ததாகவும், மூத்த இராணுவ அதிகாரிகளுடன் ஆய்வு செய்ததாகவும் வடகொரிய அரசு செய்தி முகமையான கேசிஎன்ஏ தெரிவித்துள்ளது.
`குவாம் மீது சுற்றி வளைத்திருக்கும் நெருப்பு வளையத்துக்கான தயாரிப்புகள்’ முடிவடைந்துள்ள நிலையில், வடகொரியாவின் கேந்திரப் பாதுகாப்புப் படை கமாண்டர், தாக்குதல் உத்தரவுக்காகக் காத்திருக்கிறார்.
அதே நேரத்தில், எந்த முடிவு எடுப்பதற்கும் முன்னதாக, அமெரிக்காவின் செயல்பாடுகளைக் கவனிக்க வடகொரியத் தலைவர் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
இது, ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளைத் தணிக்க உதவும் என கருதப்படுகிறது.
தாற்காலிகமாக நிறுத்தி வைக்கும் பட்டனை அடுத்த கிம் ஜாங்-உன் முடிவு செய்திருப்பதாகக் கூறும், சோலில் உள்ள பிபிசி செய்தியாளர் யோகிதா லிமயே, வடகொரியா போன்ற இரகசியமான ஒரு நாட்டில், எதையும் உறுதியாகச் சொல்லி விட முடியாது என்கிறார்.
வடகொரியா, தாக்குதலுக்கு இன்னும் முழுமையாகத் தயாராகாத நிலையில், காலம் கடத்துவதற்காகவே இத்தகைய உபாயத்தைக் கையாளலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.