கைத்துப்பாக்கியுடன் சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.பெஹலியகொட பிரதேசத்தில் வைத்து குறித்த இராணுவ சார்ஜன்ட் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளினால் கட்டுப்படுத்தப்பட்டு வந்த பகுதியிலிருந்து கைத்துப்பாக்கியைக் கொண்டு வந்து, விற்பனை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஊனமுற்ற இராணுவ படைவீரர் ஒருவருக்கு இந்த கைத்துப்பாக்கி விற்பனை செய்யப்பட்டுள்ளது. பாதாள உலகக்குழு தலைவரான அங்கொட லொக்கா தரப்பினால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதனைத் தொடர்ந்து குறித்த ஊனமுற்ற படைவீரர் இந்த கைத்துப்பாக்கியை கொள்வனவு செய்துள்ளார் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
வவுனியா 211ம் படையணியில் கடைமையாற்றிய குறித்த இராணுவ சார்ஜன்ட் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் பங்களிப்பு வழங்கியவர் என தெரிவிக்கப்படுகிறது.
கைத்துப்பாக்கியை கொள்வனவு செய்த ஊனமுற்ற இராணுவ கோப்ரல் மீது பொய்க் குற்றச்சாட்டு சுமத்தி சிறையில் அடைக்கப்பட்டதாகவும், சிறையில் அங்கொட லொக்காவின் சகா ஒருவருடன் ஏற்பட்ட முரண்பாடே கொலை மிரட்டலுக்கான காரணம் எனவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
கொலை மிரட்டல் காரணமாகவே ஊனமுற்ற இராணுவ கோப்ரல் கைத்துப்பாக்கியை இரண்டரை லட்சம் ரூபா கொடுத்து கொள்வனவு செய்துள்ளார்.
கடந்த 10ம் திகதி இந்த கைத்துப்பாக்கி விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கைத்துப்பாக்கியை விற்பனை செய்து பெற்ற இரண்டரை லட்சம் ரூபா பணத்தை ஒரே இரவில் வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் சூதாடி, இந்த இராணுவ சார்ஜன்ட் இழந்துள்ளார் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.