புனர்வாழ்வு அமைச்சர் எமக்குத் தருவதாகக் கூறிய 148 மில்லியன் ரூபாவையும் உடனடியாகத் தரும் பட்சத்தில் எம்மிடமுள்ள காணிகளை விடுவிப்போம் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், முல்லைத்தீவு, கேப்பாப்புலவில் அமைந்துள்ள இராணுவத் தலைமையகத்தை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு எமக்கு 148 மில்லியன் ரூபா தருவதாக புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் உறுதியளித்தார்.
குறிப்பிட்ட நிதி கிடைத்த பின்னர் முல்லைத்தீவில் இராணுவத்தின் முக்கிய முகாம்கள் வேறிடத்தில் அமைப்பதற்கான நடவடிக்கைகள் துரிதமாக இடம்பெறும்.
அதன்பின்னர் முல்லைத்தீவிலுள்ள 111 ஏக்கர் காணிகளையும் நாம் விடுவிப்போம் எனத் தெரிவித்துள்ளார்.