வடக்குக் கிழக்கில் அரசாங்கத்திற்கு எதிராகவோ அல்லது சட்டவிரோதமான செயல்களிலோ முன்னாள் போராளிகள் எவரும் ஈடுபடவில்லையென புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று பூந்தோட்ட புனர்வாழ்வு முகாமில் முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு கோழிக்குஞ்சுகள் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும்அவர் தெரிவிக்கையில்,
எங்களால் புனர்வாழ்வளிக்கப்பட்ட 12190பேரில் ஒருவர் கூட சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. இருப்பினும் ஒருவர் மாத்திரமே பாதாள உலக கும்பலுடன் இணைந்து செயற்பட்டதாக எமக்குத் தகவல் கிடைத்தது எனவும் தெரிவித்தார்.