முள்ளிவாய்க்கால் மக்கள் வாழ்விடங்கள் மீது எறிகணைத் தாக்குதல்
இன்றைய நாளில் 16-04-2009 அன்று வியாழக்கிழமை காலை 8:50 நிமிடமளவில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பு வலயத்தில் உள்ள முள்ளிவாய்க்கால்; பகுதியில் மக்கள் வாழ்விடங்கள் மீது சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டது
அன்று நடத்திய தாக்குதல்களில் 36 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 43 பேர் படுகாயமடைந்துள்ளனர். இத்தாக்குதல்களினால் மக்களின் 7 கூடாரங்கள் முற்றாக அழிந்து நாசமாகின.
காயமடைந்தவர்கள் முல்லைத்தீவு பொதுமருத்துவமனையினதும் நட்டாங்கண்டல் மருத்துவமனையினதும் சிகிச்சை நிலையங்களில் அனுமதிக்கப்பட்டார்கள்
இதேவேளையில் காயமடைந்தவர்களுக்கு ‘திலீபன்’ மருத்துவ சேவைப்பிரிவினரும் சிகிச்சைகளை வழங்கப்பட்டது
மாத்தளன் மருத்துவமனைக்குச் செல்லும் வீதி படையினரின் கடுமையான எறிகணைத் தாக்குதல்களுக்கு இலக்காகி காயமடைந்தவர்களை கொண்டுசெல்ல முடியாத நிலை ஏற்பட்டுட்ட கொடிய நாட்கள் .
‘மக்கள் பாதுகாப்பு வலய’ பகுதிகள் மீது தாக்குதல் மீண்டும் மீண்டும் இப்பதிகளை நோக்கி தாக்குதலை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு இதே நாளில் இன்னும் பலர் வேறு வேறு இடங்களில் படுகொலை செய்யப்பட்டார்கள்
-மீள் பதிவு