மஸ்கெலியா – நோட்டன்பிரிட்ஜ் பிரதான வீதியில் ஹப்புகஸ்தென்ன பகுதியில் இன்று(19) விடியற்காலை பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததன் காரணமாக அவ்வீதியினூடான போக்குவரத்து சில மணிநேரம் தடைப்பட்டிருந்ததாக மஸ்கெலியா காவல் துறை தெரிவித்தனர்.
எனினும் மரத்தை வெட்டி அகற்றி பிரதான வீதியினூடான போக்குவரத்தை சீர் செய்துள்ளதாக காவல் துறை மேலும் தெரிவித்தனர்.
போக்குவரத்து தடைப்பட்டிருந்ததன் காரணமாக அட்டன், நோட்டன்பிரிட்ஜ் மற்றும் லக்ஷபான, ஒஸ்போன் போன்ற பிரதேசங்களுக்கு செல்லும் வாகனங்கள் பல சிரமங்களுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடதக்கது.
மேலும் மேல் கொத்மலை, கெனியன், மவுஸ்ஸாக்கலை, காசல்ரீ போன்ற நீர்தேக்கங்களின் நீர்மட்டமும் சடுதியாக உயர்ந்துள்ளது.
இதனால் நீர்தேக்கங்களை அண்டிய பிரதேசங்களில் வாழும் பிரதேச மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு காவல் துறையினர் கேட்டுக்கொள்கின்றனர்.