முஸ்லிம்கள் இலங்கைக்கு வரும்போது ஒருபோதும் பெண்களைக் கூட்டி வரவில்லை. அவர்கள் இங்குவந்து சிங்களப் பெண்களையே மணம் முடித்தனர் என வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் பிரிவுக் கூட்டம் கடந்த 17ஆம் நாள் கொழும்பில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்கள் பண்டாரநாயக்கா காலம் தொட்டு சிறிலங்கா சுதந்திரக் கட்சியையே ஆதரித்து வருகின்றனர்.
கடந்த 30 வருட போராட்டத்தின் மூலமே நாம் தமிழர், சிங்களவர்கள், முஸ்லிம்கள் எனப் பிரிந்து நிற்கின்றோம்.
அது மட்டுமன்றி, தமிழர்களுக்கு, சிங்களவர்களுக்கு, முஸ்லிம்களுக்கு எனத் தனித் தனிப் பாடசாலைகளை அமைத்துள்ளோம். அதற்காகவே நான் வவுனியாவில் மூன்று இனத்தவர்களும் கல்விகற்கக்கூடிய பாடசாலையொன்றை அமைத்துள்ளேன்.
இந்த நாட்டுக்கு முஸ்லிம்கள் வரும்போது ஒருகாலமும் பெண்களை அழைத்து வரவில்லை. அவர்கள் இங்குள்ள சிங்களப் பெண்களையே மணம் முடித்தனர் எனத் தெரிவித்தார்.