வடமாகாணசபை உறுப்பினரும், புளொட் உறுப்பினருமான ஜி.ரி. லிங்கநாதன் தனக்கு அமைச்சுப் பதவி வழங்கினால் தான் அதனை ஏற்கத் தயாராக இருப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் வடமாகாண சபையில் குழப்பம் ஏற்பட்டு அமைச்சுப் பதவியிலிருந்து விவசாய அமைச்சர் ஐங்கர நேசன் பதவி விலகியதையடுத்து வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஜி.ரி.லிங்கநாதனை அமைச்சுப் பதவி ஏற்குமாறு கோரியிருந்தார்.
இந்நிலையில், தான் அமைச்சுப் பதவியை ஏற்பதற்காகத்தான் விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் மீது குற்றச்சாட்டு முன்வைத்ததாக தெரியப்படுத்தப்படும் என்ற காரணத்திற்காகவே அமைச்சுப் பதவியை ஏற்க மறுத்ததாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் தனது ஆதரவாளர்கள் தன்னை அமைச்சுப் பதவியை ஏற்குமாறு கோரி வருவதாகவும், முன்னர் நீங்கள் அமைச்சுப் பதவியை ஏற்கக் கோரியபோது வேறு ஒருவர் அமைச்சராக இருந்ததாகவும், தற்போது அவர் பதவி விலகியுள்ளதால், தற்போது அமைச்சுப் பதவியைத் தந்தால் அதனை ஏற்கத் தயாராக இருப்பதாக மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.
எப்படியிருப்பினும், லிங்கநாதனுக்கு அமைச்சுப் பதவி வழங்குவதற்கு புளொட் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.