வவுனியா செட்டி குளத்தில் புதிய பிரமாண்டமான புத்தவிகாரை ஒன்று விரைவில் அமையப்பெறும் என நினைக்கிறேன். காரணம் நேற்று செட்டிக்குளத்தில் இட்பெற்ற அகழ்வாராச்சியின் போது 6000 ஆண்டுகளுக்கு முன்னர் அந்தப்பகுதியில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதராம் ஒன்றை இலங்கை தொல்லியில் திணைக்களம் கண்டெடுத்துள்ளது.
அண்மைக்காலமாக அதாவது போர் முடிவுக்குப்பின்னர் தமிழர் தாயகப்பகுதிகளில் இலங்கை தொல்லியல் திணைக்களம் அகழ்வு ஆராச்சிகளை மேற்கொண்டு தடயப்பொருட்களை எடுத்த இடங்களையெல்லாம் அடையாளப்படுத்தி அந்த இடம் தொல்லியல் திணைக்களத்திற்கு உரித்தான இடம் என்றும் அந்த இடங்களை துப்பரவு செய்வதோ அல்லது கட்டிடங்களை அமைப்பதோ குற்றம் என அறிப்பு பலகையும் வைக்கப்பட்ட பின்னர், அவ்வாறு அடையாளப்படுத்தப்பட்ட இடங்களுக்கு செல்லும் பௌத்த மதகுருமார்கள் அது தமது வரலாறு என்று கூறுவதுடன் அந்தப்பகுதிகளை ஆக்கிரமித்து புத்தவிகாரைகளையும் அமைத்து வருகின்றனர்.
உதாரணமாக திருகோணமலை மாவட்டத்தில் இலங்கைத்துறை முகத்துவராம்,திரியாய், அம்முபாறை மாவட்மாவட்டம் மாணிக்கமடு,முல்லைத்தீவு மாவட்டம்கற்சிலைமடு போன்ற இடங்களில் இந்த வகையில் தான் ஆக்கிரமிப்பு இடம்பெற்றது. இதைப்போலவே செட்டிகுளமும் எமது கைகளில் இருந்து பறிக்கப்படுவதற்கான ஒரு ஆரம்ப கட்டமாகத்தான் இதை பார்க்க முடிகிறது.
- சிவ கரன்