கூட்டாக வாழும் எறும்புகளுக்கு, முக்கியமான உணர்வு, நுகரும் சக்தி தான். எதிரிகளை கண்டறிவது முதல், சாரி சாரியா ஊறும் போது, தகவல்களை பரிமாறுவது வரை, எல்லாவற்றுக்கும் வாசனைகளைத் தான், எறும்புகள் பயன்படுத்துகின்றன.
இந்நிலையில், நியூயார்க் பல்கலைக் கழக விஞ்ஞானிகள், மரபணு மாற்றத்தின் மூலம், வாசனை அறியும் உணர்வு, 90 சதவீதம் இல்லாத எறும்புகளை உருவாக்கி உள்ளனர்.
பரிசோதனைக்காக அவர்கள் எடுத்துக் கொண்டது, இந்தியாவில் காணப்படும் எறும்பு வகைகளைத் தான்!
வாசனை அறியாத எறும்புகள், தங்கள் வசிப்பிடத்தை கண்டறிய முடியாமல் தவித்தன. உணவு தேடுவதில், அவை ஈடுபாடு காட்டவில்லை; தனிமையை அதிகம் நாடின. தனியே இருக்கையில், தங்கள், ‘மீசை’யை அடிக்கடி உதறி சண்டை போடுவது போல பாவனை செய்தன. மிகவும் சிக்கலான, சமூக சட்டத் திட்டங்களுடன் வாழும் எறும்புகளை பற்றி, மேலும் அறிய, இந்த ஆய்வு உதவும் என்கின்றனர், விஞ்ஞானிகள்.