திருகோணமலை மாவட்டத்தின் இன விகிதாசாரம் மாற்றமடைந்துள்ளதால், இன விகிதாசாரத்தைக் கணிப்பிடுவதாயின் நாட்டிலிருந்து மக்கள் வெளியேறுவதற்கு முன்னர் இருந்த காலப்பகுதியிலிருந்தே கணிப்பிடவேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இன்று காலை நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும்அவர் தெரிவிக்கையில்,
1983ஆம் ஆண்டு திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்களின் இனவிகிதாசாரம் 42 வீதமும் முஸ்லிம்களின் 32வீதமும் சிங்களவர்கள் 26 வீதமுமாக காணப்பட்டது.
நாட்டில் எற்பட்ட போரின் காரணமாக திருகோணமலையில் இருந்து இந்தியாவுக்கு பலர் இடம்பெயர்ந்துள்ளார்கள். இவர்கள் முழுமையாக வந்து சேரவில்லை. இது போல ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏனைய நாடுகளுக்கும் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இவர்களும் நாட்டுக்கு முழுமையாக வந்து சேரவில்லை இந்த நிலையிலே இன்று புள்ளி விபரம் மாறியுள்ளது எனவே தற்போதய நிலையை மட்டும் வைத்துக் கொண்டு புள்ளி விபரங்களைப் பேசக் கூடாது எனத் தெரிவித்தார்.