யாழ். பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானபீடத்தில் கல்விகற்கும் மாணவன் ஒருவர் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார்.
காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குறித்த மாணவனுக்கு இதயத்தில் கிருமித் தொற்று ஏற்பட்டதன் காரணமாகவே உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்பட்டது.
வவுனியாவைச் சேர்ந்த 23 வயதுடைய விஜயேந்திரன் நிந்துஜன் என்ற மாணவனே உயிரிழந்துள்ளார்.
கோண்டாவில் பிரதேசத்திலுள்ள வீடொன்றில் தங்கிநின்று கல்வி கற்ற குறித்த மாணவன் தொடர்ச்சியான காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இயலாமை காரணமாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காகச் சென்றார்.
அங்கு நோயின் தாக்கம் அதிகமாக இருந்ததன் காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளித்தும் பயனளிக்காது ஒரு மணித்தியாலத்துக்குள் உயிரிழந்தார்.
அவரது இதயத்தில் கிருமித் தொற்று ஏற்பட்டதன் காரணமாகவே இறப்பு நிகழ்ந்துள்ளதாக உடற்கூற்று வைத்தியப் பரிசோதனையின்மூலம் தெரியவந்துள்ளது.