வடமாகாண போக்குவரத்துத் துறை அமைச்சர் டெனீஸ்வரனை அவரது அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குவதற்கு முதலமைச்சருக்கு அதிகாரம் உண்டா என சட்டமா அதிபருக்கு வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே கடிதம் அனுப்பியுள்ளார்.
வடமாகாண போக்குவரத்துத் துறை அமைச்சர் டெனீஸ்வரனை தமது கட்சியிலிருந்து நீக்குவதாக ரெலோஅமைப்பு அறிவித்ததையடுத்து, அவரை அமைச்சுப் பதவியிலிருந்து விலகுமாறு வடமாகாண முதலமைச்சரினால் வடமாகாண ஆளுநருக்கு கடிதம்அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து அமைச்சர் டெனீஸ்வரன் வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரேக்கு தானே சட்டரீதியாக போக்குவரத்துத் துறை அமைச்சராக இருப்பதாகக் கடிதம் அனுப்பியிருந்தார்.
இந்நிலையில், அமைச்சர் டெனீஸ்வரனை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குவதற்கு முதலமைச்சருக்கு அதிகாரம் உண்டா? எனக் கோரி வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே சட்டமா அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
ஆளுநரின் கடிதத்திற்கு இதுவரை சட்டமாஅதிபர் திணைக்களத்திடமிருந்து பதில் அனுப்பி வைக்கப்படவில்லையெனவும், அதன் பின்னரே ஆளுநர் சட்டரீதியாக முடிவெடுப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வடமாகாண சுகாதார அமைச்சராக மருத்துவர் குணசீலனை நியமித்தமைக்கு ரெலோ அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.