வட-கிழக்கு மாகாணங்களில் ஒரு இலட்சத்து அறுபதினாயிரம் வீடுகள் தேவைப்படுவதாக மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 78 வீடுகள் கையளிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
இவர்கள் அனைவருக்கும் வீடுகள் வழங்கவேண்டுமென்பதே எமது நோக்கமெனவும், அவர்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பவேண்டிய பொறுப்பு தமக்குள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்