யுத்தம் நிறைவடைவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுக்கும் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கொள்வனவாளர் கேபியிற்கும் இடையில் இடம்பெற்ற தொலைத்தொடர்பு உரையை நாம் ஒட்டுக்கேட்டோம் என சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பத்திரிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
அதில் யுத்தத்தை கைவிட்டு விட்டு வெளிநாடொன்றுக்கு ஓடி விடுங்கள். பிறகு ஒரு நேரம் வந்து நாட்டை மீட்டு எடுப்போம் என குமரன் பத்மநாதன் பிரபாகரனிடம் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த பிரபாகரன், என்னால் நிலைமைகளை மாற்ற முடியும், ஆயுதங்கள் தேவைப்படுகின்றது எனக் கூறினார்.
இந்த உரையாடலில் இருந்து நாம் விளங்கிக் கொண்டது பிரபாகரனுக்கு ஒருபோதும் சரணடையும் எண்ணம் இருக்கவில்லை என்பதாகும் என சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்துடன், இறுதியாக 50 விடுதலைப்புலிகள் சரணடையவுள்ளதாக நோர்வேத் தூதுவர் எரிக்சொல் ஹெய்ம் தன்னிடம் தெரிவித்ததாகவும், பின்னர் அது தொடர்பாக அவர் தன்னிடம் எதுவும் கூறவில்லையெனவும் தெரிவித்துள்ளார்.