கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துவெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியானதன் பின்னர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டணி அறிவிக்கப்படும் என பிவித்துரு ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் இணைந்துள்ள அனைத்து கட்சிகளும் இணைந்து புதிய கூட்டணி உருவாகும்.
அதுமட்டுமல்ல, அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்களும் இந்தக் கூட்டணியில் இணைய முடியும் என்றும் உதய கம்மன்பில கூறியுள்ளார்.