ரவி கருணாநாயக்கவிற்கு விசேட பதவியொன்று வழங்கப்பட்டுள்ளதாக ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
அலரி மாளிகையில் காரியாலயம் ஒன்றை அமைத்து ரவி கருணாநாயக்க அங்கு அமர்த்தப்பட்டுள்ளார். கிராமிய அபிவிருத்தி விவகாரம் தொடர்பிலான முக்கிய பதவியொன்று ரவிக்கு வழங்கப்பட்டுள்ளது.
கிராமிய மட்டத்திலான அபிவிருத்தி தொடர்பில் தங்களது யோசனைகளை முன்வைக்குமாறு ரவி கருணாநாயக்க 2017.08.22 திகதியிடப்பட்ட கடிதம் ஒன்றின் மூலம், ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், தொகுதி அமைப்பாளர்களுக்கு அறிவித்துள்ளார்.
ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் பதவியை இராஜினாமா செய்த ஒருவருக்கு இவ்வாறு அரசாங்கம் பதவி வழங்கியமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.